மாத சம்பளத்தை இலங்கைக்கு வழங்கிய திமுக எம்.எல்.ஏ.க்கள்!

Mayoorikka
3 years ago
மாத சம்பளத்தை இலங்கைக்கு வழங்கிய திமுக எம்.எல்.ஏ.க்கள்!

இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஒரு மாத ஊதியம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுமார் ஒரு கோடியே 30 இலட்சத்து 20 ஆயிரம் (இந்திய) ரூபாய்க்கான காசோலையை அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கினார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகின்றது.

திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ. 1 கோடி (இந்திய ரூபாய்) நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில் திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் சார்பிலும் ஒரு மாத ஊதியம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!