அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை! செவ்வாயன்று விவாதம்
#SriLanka
#Gotabaya Rajapaksa
#Lanka4
Reha
3 years ago

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்வைத்துள்ளனர்.
புதன்கிழமை (11) நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டம் முடிவில்லாமல் நிறைவடைந்த நிலையில் தற்போதைய நெருக்கடிகளுக்கு சாத்தியமான தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் இரண்டாவது நாளாக நேற்று கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



