நயன்தாரா - விக்கி திருமண வரவேற்பு! யாரெல்லாம் வருகிறார்கள் தெரியுமா
Prabha Praneetha
3 years ago

நடிகர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வரும் ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என தகவல் வந்ததில் இருந்தே அவர்களுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.
திருப்பதியில் நடைபெறும் அவர்கள் திருமணத்தில் மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளப்போகிறார்கள் என தெரிகிறது.
திருமணம் திருப்பதியில் நடந்தாலும் அதற்கு பிறகு சென்னையில் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றனர் என்று தெரிகிறது.
அந்த ரிசப்ஷனுக்கு தமிழ் சினிமாவில் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என்றாலும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கு மிக நெருக்கமான சமந்தா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கண்டிப்பாக கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.



