ரஷிய இணையதளங்கள் மீது உக்ரைன் ஆதரவு ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்

#Ukraine #Russia
Prasu
3 years ago
ரஷிய இணையதளங்கள் மீது உக்ரைன் ஆதரவு ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்

 உக்ரைனின் முக்கிய துறைமுகமான ஒடேசா மீது ரஷிய படையினர் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை மூலம் தாக்குதல் நடத்தினர்.  ஒடேசாவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டர் மற்றும் ஒரு கிடங்கு மீதும் ஏழு ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவ்வில் மீண்டும் தூதரகத்தை ஜெர்மனி திறந்துள்ளது. ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் தூதரகத்தை மீண்டும் திறந்து வைத்தார். போர்க் குற்றங்களை விசாரிப்பது உள்பட உக்ரைனுக்கு  முழு ஆதரவு அளிப்பதாக அப்போது அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே கார்கிவ் நகரத்தில் இருந்து 120 கிமீ தொலைவில் உள்ள கட்டட இடிபாடுகளில் இருந்து 44 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

ரஷியாவின் வீடியோ தளமான ‘ரூடியூப்’ மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 2 நாட்களாக ரூ டியூப் செயல்படாமல் உள்ளது. 2-ஆம் உலகப்போரில் வெற்றி விழாவை கொண்டாடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ரூடியூப் வரலாற்றில் இது மிகப்பெரிய சைபர் தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில ஹேக்கர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின் வெற்றி தினத்தையொட்டி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இரண்டாம் உலகப் போரில் நம் முன்னோர்கள் செய்ததை நாம் மறக்கமாட்டோம். இன்று கொண்டாடுவதை போல இன்னும் ஒரு வெற்றி நாளை விரைவில் கொண்டாடுவோம். அப்போது வென்றோம், இப்போதும் நாம் வெல்வோம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!