நீர்கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை, இரண்டு குழுக்களுக்கிடையிலும் மோதல்கள்.
#SriLanka
#Lanka4
Shana
3 years ago

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு தீன் சந்தியிலும் சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன, மத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுவொன்றினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



