சட்டமா அதிபரினால் பொலிஸ் மா அதிபருக்கு விசேட கடிதம்

Prathees
3 years ago
சட்டமா அதிபரினால் பொலிஸ் மா அதிபருக்கு விசேட கடிதம்

காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினருக்கும் சட்டரீதியான பொறுப்பு இருப்பதாக சட்டமா அதிபர் எழுத்து மூலம் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு பொலிஸ் மா அதிபர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

காலி முகத்திடல் மக்கள் போராட்டத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தாக்குதல் தொடர்பில் சட்டத்தரணிகள் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!