சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம் - இருவர் கைது
Reha
3 years ago

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேர வாவிக்கு அருகில் ஒரு குழுவினரால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரின் வாகனமும் கும்பலால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.



