லிட்ரோ எரிவாயு லொறிகள் நிறுத்தப்படும் முற்றத்திற்கு இனந்தெரியாத சிலரினால் தீ வைப்பு!
Reha
3 years ago

கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் கனக ஹேரத்தின் வீடு மற்றும் லிட்ரோ எரிவாயு லொறிகள் நிறுத்தப்படும் முற்றத்திற்கு இனந்தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர்.
மூன்று எரிவாயு லொறிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
பின்னர் நேற்றிரவு மாவனெல்லை தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் மற்றும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கேகாலை மொலமுரே மாவத்தையில் அமைந்துள்ள கனக ஹேரத்தின் வீட்டின் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



