முல்லைத்தீவில் அலையில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் - சோகத்தில் மக்கள்

முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக சென்ற நிலையில் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்டது. அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர் .
இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களில் ஒருவர் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்றும் நோக்கோடு ஏனைய இரு சகோதர்களும் முயற்சியில் ஈடுபட்டுள்ளபோது அவர்களும் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
யாழ். வீதி அலம்பிலை சேர்ந்த பத்மநாதன் விஸ்வநாதன் (29) பத்மநாதன் விஜித் (26) பத்மநாதன் விழித்திரன் (22) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களே அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து பெருமளவான மக்கள் செம்மலை கடற்கரை பகுதியில் குவிந்துள்ளதோடு பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
தாழமுக்கம் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதால் தேடுதல் முயற்சிகள் எவையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை .
 copy.jpg)
.jpg)
.jpg)



