சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் - கங்காராம பகுதியில் பதற்ற நிலை
Nila
3 years ago

கொழும்பு – அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து உடைத்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாகனத்தின் மீதும் தீ வைக்க முற்பட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் நிலைமை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவரை பிடித்த நிலையில் அதில் ஒருவர் தப்பியோடியுள்ளதாகவும் தெரியவருகிறது.



