நீர்கொழும்பிலும் தீக்கிரைக்குள்ளாகிய அரசியல்வாதிகளின் வீடுகள், விடுதிகள்

நீர்கொழும்பு அரசியல்வாதிகளுக்கு சொந்தமான ஹோட்டல்களும் வீடுகளும் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டன.
கொழும்பு “கோட்டா கோ கம” மற்றும் “மைனா கோ கம” போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து நீர்கொழும்பு நகரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று (9)மாலை முதல் நீர்கொழும்பு நகரிலுள்ள அரசியல்வாதிகளுக்கு சொந்தமான ஹோட்டல்களும் மற்றும் அரசியல்வாதிகளுடைய வீடுகளும் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டன.
தளுபத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமால் லான்சாவின் வீடு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக அந்த வீட்டில் உள்ள சகல பொருட்களும் எரிந்து நாசமாகி உள்ளன.
அதேபோன்று நிமல்லான்ஸாவின் சகோதரரும் நீர்கொழும்பு மேயருமான தயான் லான்ஸாவுடைய வீடும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீர்கொழும்பு கிரேன்டேசியா ஹோட்டலின் உரிமையாளருடைய வீடும் சேதமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீர்கொழும்பில் மூன்று ஹோட்டல்களும் இரண்டு விடுதிகளும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. இவைகள் அரசியல்வாதிகளுடையதும் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமானதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)



