கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில்!
Prathees
3 years ago

காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 219 பேரில் 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
காலி முகத்திடல் போர்க்களத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு மோதல்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 230ஐ தாண்டியுள்ளது.



