பிரதமர் மகிந்த பதவி விலகல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிவிப்பு!

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகலை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவை ஐ.நா கவனத்தில் எடுத்துள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சவால்களுக்கு உரையாடல் மற்றும் நாட்டின் மற்றும் மக்களின் நலன்களை மனதில் கொண்டு தீர்வு காண அனைத்து இலங்கை பங்குதாரர்களையும் நாங்கள் தொடர்ந்து ஊக்குவிக்கிறோம், என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான சமீபத்திய வன்முறைகள் குறித்தும் ஐ.நா கவலை கொண்டுள்ளது என்றார்.
ஐ.நா அமைதி மற்றும் கட்டுப்பாடு, அத்துடன் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்துள்ளது.



