வடரேகா கைதிகள் போராட்டத்தை தாக்க வந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது
#SriLanka
#Attack
#Prison
Mugunthan Mugunthan
3 years ago

காலி முகத்திடலில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களில் வடரெக சிறைச்சாலையில் உள்ள கைதிகளும் உள்ளடங்குவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
வடரெக சிறைச்சாலையில் இருந்து கொழும்பில் உள்ள பல கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிய வந்த குழுவொன்றை கடுவெல பிரதேசத்தில் வைத்து சிலர் தாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய சம்பவத்தின் பின்னர் தனியார் நிறுவனங்களில் பணியாற்ற வந்த 181 கைதிகளில் 58 பேரை காவலில் எடுக்க முடியவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.



