யூதர்கள் குறித்து பேசியதால் ரஷ்ய மந்திரி மீது இஸ்ரேல் கண்டனம்

#Ukraine #Russia #War
Prasu
4 years ago
யூதர்கள் குறித்து பேசியதால் ரஷ்ய மந்திரி மீது இஸ்ரேல் கண்டனம்

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போர் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ‘2-ம் உலகப்போரில் ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் யூதர்களை தாக்கியது போல ரஷியா தங்களை தாக்குகிறது’ என கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், “உக்ரைனில் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட சில பிரமுகர்கள் யூதர்களாக இருந்தாலும் கூட அங்கும் நாஜி கூற்றுகள் இருக்கும். ஏனெனில் ஹிட்லருக்கே யூத இரத்தம் இருந்தது. அவர் தான் யூதர்களை கொன்று குவித்தார். மிகவும் தீவிரமான யூத எதிர்ப்பாளர்கள் பொதுவாக யூதர்கள்தான் என்று புத்திசாலியான யூத மக்கள் கூறுகிறார்கள்” என்றார். 

ரஷிய மந்திரியின் இந்த பேச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ரஷியாவுக்கு இஸ்ரேல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவு மந்திரி யாயிர் லாபிட் கூறுகையில், “ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவின் கருத்துக்கள் மன்னிக்க முடியாத மூர்க்கத்தனமான அறிக்கை ஆகும். அவரது வாக்கியம் ஒரு பயங்கரமான வரலாற்று பிழை. யூதர்களே யூதருக்கு எதிர்ப்பு என்று யூதர்களுக்கு எதிராக குற்றம் சாட்டுவதாகும்” என கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4