கடுமையான மின்பற்றாக்குறையை சந்திக்கும் பாகிஸ்தான் - 18 மணி நேரம் மின் தடை

#Pakistan #Power
Prasu
4 years ago
கடுமையான மின்பற்றாக்குறையை சந்திக்கும் பாகிஸ்தான் - 18 மணி நேரம் மின் தடை

பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி, நாட்டில் நீடித்த மின் தடையை மோசமாக்கியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பல பகுதிகள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்திது வருகிறது.

நகர்ப்புற மையங்கள் 6 முதல் 10 மணிநேரம் வரையிலும், கிராமப்புறங்களில் ஒரு சில பகுதிகள் ஒரு நாளைக்கு சுமார் 18 மணிநேரம் நீடித்த மின்வெட்டுக்கு உள்ளாகிறது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை, மற்றும் தேவை மற்றும் விநியோகத்தில் மாறுபாடு நிலவுவதன் காரணமாக மின் உற்பத்தி ஆலைகளில் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியவில்லை. இதனால், சுமார் 6,000 முதல் 7,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீண்டநேர மின்வெட்டு, தங்களது பணிக்கு இடையூறாக இருப்பதாக சிறு வணிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அதிகரிக்கும் கோடை வெப்பம் மற்றும் மின் தேவையின் காரணமாக மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த மின்வெட்டு பிரச்சனையால், அங்குள்ள மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4