தமிழ் நாட்டில் மீண்டும் சர்ச்சை - சாலையில் சண்டையிட்டுக் கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள்
#India
#Tamil Nadu
#Student
Mugunthan Mugunthan
3 years ago

அரசுப் பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சாலையில் அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஒதுங்கி நின்றனர்.
இதனை காரில் சென்ற நபர் ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



