கோட்டாபயவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

Mayoorikka
3 years ago
 கோட்டாபயவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில்  சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவை பதவி விலக வேண்டும். ஜனாதிபதியின் விருப்பத்துக்கமைய இடைக்கால அரசு அமைய வேண்டும் . அதற்கு வழிவிடும் வகையிலான யோசனையொன்று ஜனாதிபதியிடம்  முன்வைக்கப்பட்டது. இன்றைய  சந்திப்பிலும் அது பற்றி பேசப்படும்.

பாராளுமன்றத்தில் 113 என்பதைவிடவும், மக்களின் கோரிக்கையே எமக்கு முக்கியம்.” – என்றார் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!