நியூசிலாந்து சென்று திரும்பிய மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன்

Prathees
3 years ago
நியூசிலாந்து சென்று திரும்பிய மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன்

குடும்ப தகராறு காரணமாக நேற்றிரவு (24) கம்பஹாஇ வெபொட வடக்கில் உள்ள வீடொன்றில் கணவன்  தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தானும்  தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

தாக்குதலில் காயமடைந்த மனைவியின் சகோதரி மற்றும் தோழி ஆகியோர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னர் சந்தேக நபரான கணவன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றபோது அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

கணவன்-மனைவி இருவரும் பட்டதாரிகள், கணவன் நியூசிலாந்திற்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தபோது  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

அப்போது மனைவி மட்டும் நியூசிலாந்து சென்றுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நியூசிலாந்தில் வேறு ஒருவரைச் சந்தித்துவிட்டு மனைவி தன்னை விட்டுப் பிரிந்து செல்ல முயற்சிப்பதை கணவர் உணர்ந்ததாகவும், இந்த விவகாரத்தில் இருவரும் விவாகரத்து செய்யவிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மனைவி அண்மையில் நாடு திரும்பியுள்ளார். அவர்  இலங்கை திரும்பியதிலிருந்து கணவருடன் ஒன்றாக இருக்கவில்லை. அவள் தன் வீட்டிற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

மாத்தறைஇ கேகனதுர பிரதேசத்தில் இருந்த சந்தேக நபரான கணவர் நேற்று இரவு இரகசியமாக இந்த வீட்டிற்கு வந்து இந்த குற்றத்தை செய்துள்ளார்.

வெலிவேரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!