அமெரிக்க தூதுவர் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
#SriLanka
#Jaffna
#Governor
Mugunthan Mugunthan
3 years ago

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜியூன் சங் இன்றைய தினம் (25) வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பல்வேறு தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று காலை வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பில் யாழ்ப்பாணத்திலுள்ள தற்போதைய நிலைமைகள் மற்றும் சமகாலப் போக்குகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



