இடைக்கால அரசாங்கம் அமைக்க தயார் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!
Nila
3 years ago

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்தன.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஜனாதிபதி உட்பட அனைத்து பிரதிநிதிகளும் பதவி விலக வேண்டுமென தொடர்ந்தும் ஒருமித்த குரல் எழுப்பி வருகின்றனர்.



