காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞன் உயிரிழப்பு!
Nila
3 years ago

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டம் இன்று 17வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டத்திற்கான ஆதரவு பெருகிவருகின்றது.
இந்நிலையில் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்ட இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த சில நாட்களாக காலிமுகத்திடல் கோட்டா கோ கமவில் தூங்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு போராட்டத்தில் கலந்துக்கொண்டு வீடு செல்கையில் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.



