பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இன்று இடம்பெறும் - கலாநிதி ரமேஷ் பத்திரன
Prabha Praneetha
3 years ago

பல ஆசிரியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இன்று இடம்பெறும் என கல்வி அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
பல தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை வேலைநிறுத்தத்திற்கு திட்டமிட்டிருந்த போதிலும் ஆசிரியர்கள் இன்று பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்கள் என நம்புவதாக அமைச்சர் கூறினார்.
தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுப்பது ஆசிரியர்களின் உரிமையென்றாலும் பாடசாலை மாணவர்களை கருத்திற்கொண்டு இன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக பல ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் நேற்று அறிவித்திருந்தன.



