இன்றைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!
#SriLanka
#Sri Lanka Teachers
#Lanka4
Reha
3 years ago

இன்றைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
எரிபொருள் இன்மையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அத்துடன் பொது மக்களின் கருத்துக்கு அரசாங்கம் மதிப்பளிக்காது தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்து வருகின்றது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இந்த சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு மலையகத்தின் சகல ஆசிரிய தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்குவதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் தெரிவித்தார்.



