மரியுபோல் நகரில் மக்கள் தஞ்சமடைந்த ஆலை மீது ரஷிய படை தாக்குதல்

#Ukraine #Attack
Prasu
4 years ago
மரியுபோல் நகரில் மக்கள் தஞ்சமடைந்த ஆலை மீது ரஷிய படை தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இரண்டு மாதத்தை கடந்துள்ளது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதையும் ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.

மரியுபோலில் உள்ள எக்கு ஆலையில் உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். சரண் அடையுமாறு ரஷியா தெரிவித்ததை எக்கு ஆலையில் உள்ள உக்ரைன் வீரர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

அந்த ஆலையை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள் அங்கு தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொது மக்கள், வீரர்கள் தஞ்சம் அடைந்துள்ள ஆலையை தாக்கும் முயற்சியில் ரஷிய ராணுவம் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இதனால் அங்குளள பொதுமக்களின் கதி என்ன ஆகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓடேசா நகரம் மீது ஏவுகணை ஒன்றை வீசி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை தாக்கியதில் 3 மாத குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள்.

இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது, ஓடேசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பச்சிளம் குழந்தை பலியாகி உள்ளது. அந்த குழந்தை ஒரு மாதமாக இருந்த போது போர் தொடங்கியது. என்ன நடக்கிறது என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? மரியுபோலில் ரஷிய துருப்புகள், பல்லாயிரக்கணக்கான பொது மக்களை கொன்று விட்டு அதை மறைக்க முயன்றதை காட்டும் புதிய ஆதாரங்கள் வெளியாகிறது.

தங்கள் குற்றங்களின் தடயங்களை அவர்கள் எவ்வாறு மறைக்கிறார்கள் என்பது பற்றிய ரஷிய உரையாடல்களை இடைமறித்து கேட்டு உள்ளோம் என்றார். இழந்த உக்ரைனில் உள்ள ஓஹான்ஸ்சி பிராந்தியத்தில் உள்ள கிர்ஸ்கே கிராமத்தில் ரஷியாவின் தாக்குதலில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கவர்னர் செர்ஜி கெய்டே தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4