மகாசங்கத்தின் ஆசியுடன் அரசாங்கத்திற்கு எதிராக வர்த்தகர் உண்ணாவிரதம்
Prathees
3 years ago

ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்தவரின் மரணத்துக்கும், நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் சுமைக்கும் அரசாங்கமே பொறுப்பு எனத் தெரிவித்து தொடங்கொடையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தொடங்கொடை நகரின் மையப்பகுதியில் இருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதற்கு மகா சங்கத்தினரும் ஆசீர்வாதம் வழங்கியதுடன் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் மகாசங்கத்தினர் பிரித் ஓதி ஆசீர்வதித்தனர்.
தொடங்கொடை மக்களும் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.



