வீதியின் குறுக்கே குதித்த குரங்கு: பெண்ணொருவர் பலி
Prathees
3 years ago

மன்னார், மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணையிலிப்பு குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவனும் மனைவியும் மோட்டார் சைக்கிளில் மடு விளாத்திகுளத்தில் இருந்து இரணையிலிப்புக்குளம் நோக்கி சென்று கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வீதியின் குறுக்கே குதித்ததால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த தம்பதியினர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் விளாத்திகுளத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்தனர்.



