சிறிலங்காவிற்கு பல்வேறு பதக்கங்களை வென்று கொடுத்த வீராங்கனை கௌசல்யா மதுஷானி காலமானார்!
Reha
3 years ago
.jpg)
இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைத்தாண்டல் ஓட்டப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்ற கௌசல்யா மதுஷானி காலமானார்.
26 வயதான குறித்த பெண் தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
26 வயதான அவர், 2019 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 4x400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சிறிலங்கா அணியில் உறுப்பினராக இருந்ததோடு, 400 மீற்றர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றவர்.
தற்கொலை தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



