தமிழரசுக்கட்சியின் விசேட கூட்டம்
Prabha Praneetha
3 years ago

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மார்டின் வீதியிலுள்ள தலைமை அலுவலகத்தில் விசேட கூட்டம் ஒன்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று நடைபெற்றது
இதன்போது மேதினக் கூட்டம் மற்றும் தந்தை செல்வா நினைவேந்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் .
இக்கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



