பெலியத்த, நிஹிலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி
Reha
3 years ago

பெலியத்த, நிஹிலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
நிஹிலுவ, தாரபெரிய பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவர். அவரது வீட்டில் வைத்தே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.



