நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு!
#SriLanka
#rice
#prices
Reha
3 years ago

நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் உள்ள சந்தையில் உள்ளூர் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஒரு கிலோ உள்ளூர் சம்பா அரிசி 220 ரூபாவிற்கு அரிசி ஆலைகளால் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விலை உயர்வால் உள்ளூர் சம்பா அரிசியை வாங்கும் நுகர்வோருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் வினவிய போது, உள்ளூர் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தமக்கு எவ்வித அறிக்கையும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
எனினும், இது தொடர்பில் இன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.



