அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் சுயாதீனமாக செயற்படும் எம்.பிக்களுடன் கலந்துரையாடத் தீர்மானம்!- ஐக்கிய மக்கள் சக்தி
#SriLanka
#Sajith Premadasa
#Lanka4
Reha
3 years ago

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணைக்கு சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக கலந்துரையாடல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அவநம்பிக்கை பிரேரணையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவநம்பிக்கை பிரேரணையில் அடங்கியுள்ள விடயங்கள் மற்றும் அவநம்பிக்கை பிரேரணையின் போது செயற்பட வேண்டிய விடயம் என்பன தொடர்பில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.



