குர்து இன போராளிகள் 45 பேர் கொன்று குவிப்பு - இஸ்ரேல்

#Israel #Death
Prasu
3 years ago
குர்து இன போராளிகள் 45 பேர் கொன்று குவிப்பு - இஸ்ரேல்

ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லை பகுதிகளில், மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்திஷ்கள். குர்து மொழி பேசும் தாங்கள் வாழும் நிலப்பரப்பை, குர்திஷ்தான் எனும் தனி தேசமாக உருவாக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர். குர்துக்களின் போர் குணமிக்க அரசியல் அமைப்பான குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே.) இதற்கு போராடி வருகிறது.

ஆனால், குர்துக்களின் தனி தேசத்தை விரும்பாத துருக்கி அரசு பி.கே.கே. கட்சியை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து அவர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள குர்து இன போராளிகளை குறிவைத்து துருக்கி ராணுவம் தரை வழியாகவும், வான்வழியாகவும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் குர்து இன போராளிகளின் நிலைகள் மீது தரை மற்றும் வான்வழியாக துருக்கி ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் 45 குர்து இன போராளிகள் கொன்று குவிக்கப்பட்டதாகவும் துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் மிக்பெரிய அளவில் தாக்குதல்களை நடத்த குர்து இன போராளிகள் திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் குர்து இன போராளிகளின் பதுங்கு குழிகள், ஆயுத கிடங்குகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டதாகவும் தயீப் எர்டோகன் கூறினார்.

 


 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!