போரை நிறுத்த ஐ.நா. பொதுச்செயலாளர் முயற்சி- இரு நாட்டு அதிபர்களையும் சந்திப்பு

#Russia #Ukraine #War
Prasu
3 years ago
போரை நிறுத்த ஐ.நா. பொதுச்செயலாளர் முயற்சி- இரு நாட்டு அதிபர்களையும் சந்திப்பு

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. உக்ரைனின் தலைநகர் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷியா கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

அங்குள்ள துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றி விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 2-வது மாதத்தை எட்டி இருக்கிறது.

போரை நிறுத்த ரஷியாவுக்கு ஐ.நா. சபை, உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதனை நிராகரித்து ரஷியா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் வருகிற 26-ந்தேதி ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்கிறார். அங்கு ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசுகிறார்.

அப்போது உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்தும்படி புதினிடம் வலியுறுத்துவார். அதேபோல் 28-ந்தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் சந்தித்து ஆண்டனியோ குட்டரெஸ் பேசுகிறார்.

இதுகுறித்து ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் கனேசோ கூறும்போது, ஐ.நா. பொதுச்செயலாளர் ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசுகிறார். உக்ரைனில் உடனடியாக அமைதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க புதினிடம் வலியுறுத்துவார் என்றார்.

குட்டரெஸ் தனது சுற்றுப்பயணத்தில் ரஷியா மற்றும் உக்ரைன் வெளியுறவு மந்திரிகளையும் சந்தித்து பேசுகிறார்.

இந்த நிலையில் கிழக்கு உக்ரைனை தவிர தெற்கு பகுதியையும் ரஷியா குறி வைத்து உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!