சர்வஜன‘வாக்கெடுப்புக்கு தலைவணங்குக.. அதுவரை போராட்டங்கள் தொடரும்’ - GMOA
#SriLanka
#doctor
#Meeting
Mugunthan Mugunthan
3 years ago

சர்வஜன வாக்கெடுப்புக்கு மதிப்பளித்து நாட்டை ஸ்திரப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுவாக்கெடுப்பு மூலம் நாட்டை ஸ்திரப்படுத்தும் வரை தொடர் போராட்டங்களை தொடரப்போவதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள ஆட்சியை மாற்றி, அதற்குப் பதிலாக நாட்டுக்கு ஆதரவான அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் பலமான கோரிக்கையாக இருப்பதாகவும், அடக்குமுறை மற்றும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் போராட்டத்தை ஒடுக்க அரசாங்கம் முயற்சிப்பது போல் தெரிகிறது என்றும் சங்கம் கூறுகிறது.
இதன்படி, தற்போதைய அரசியல் ஸ்திரமின்மையை அனைத்து அரசியல்வாதிகளும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தொழிற்சங்கம் பிரகடனப்படுத்துகிறது.



