குறைந்த விலையில் உணவகங்களை அமைக்க புதிய திட்டம்!

இலங்கை போஷாக்கு சங்கம் நாடளாவிய ரீதியில் குறைந்த கட்டண உணவகங்களை திறப்பதற்கான யோசனையொன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கான தீர்வாக இது முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சமையற்காரர் சங்கத்துடன் இணைந்து குறைந்த விலையில் மற்றும் இலகுவாக உணவுகளை தயாரிக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எரிவாயு பற்றாக்குறையினால் நாடளாவிய ரீதியில் சுமார் 30 வீதமான உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையிலேயே இலங்கை போஷாக்கு சங்கம் இந்த யோசனையை முன்வைத்துள்ளது. மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தற்போது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.



