இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே பிரதமர்! - மகிந்த
Prabha Praneetha
3 years ago

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார் என்று சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் பல்வேறு கொள்கைகள் காரணமாக அது செயற்படாது எனவும் கூறினார் .
இதேவேளை வேறு எந்த பிரதமருடனோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுடனோ இணைந்து பணியாற்ற எவரும் விரும்ப மாட்டார்கள் தெரிவித்த அவர் இடைக்கால அரசாங்கம் அமைந்தால் அது எனது தலைமையின் கீழ் தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், அரசாங்கத்துடன் பேசவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தலாம் என்றும் தெரிவித்தார் .



