துயிலும் இல்லம் முன்பாக இருந்து ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக போராட்டம் வெடித்தது

Mayoorikka
3 years ago
துயிலும் இல்லம் முன்பாக இருந்து ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக  போராட்டம் வெடித்தது

ராஜபக்‌ஷர்களை எதிர்த்து வடக்கிலும் இன்று (23) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமான கண்டன பேரணிக்கு முச்சக்கரவண்களின் சாரதிகளும் முச்சக்கரவண்டிகளுடன் தங்களுடைய ஆதரவை நல்கினர்.

பேரணியில் பங்கேற்றிருந்தவர்களுக்கு தண்ணீரூற்று நீராவிப்பிடிட்டி பகுதிகளை சேர்ந்த வணிகர்கள், குடிண்ணீர்களை வழங்கி போராட்டத்தினை வலுச்சேர்த்துள்ளார்கள் கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சார்பாக வன்னி மேம்பாட்டு பேரவை ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மதகுருமார்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள்,முச்சக்கரவண்டி சங்கத்தினர்,வணிகர்கள் வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவனேசன் மற்றும்  பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!