வவுனியாவில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு
Prabha Praneetha
3 years ago

எரிபொருள் விலையேற்றம் காரணமாக வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக கடலுணவு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற கடல்களில் பிடிக்கப்படும் கடலுணவுகள் வவுனியாவிற்கு கொண்டு வரப்படுகின்றது.
இதன் காரணமாக அங்கிருந்து கொண்டுவரப்படும் ஒரு கிலோ விளமீன் 1000 ரூபாயாகவும் பாறை மீன் 1200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
முரல் 600 ரூபாயாகவும் சீலா 1000 ரூபாயாகவும் கணவாய் 1200 ரூபாவாகவும் சின்ன இறால் 1200 ரூபாயாகவும் பெரிய இறால் 1800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதேவேளை நண்டு 1600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் அதேவேளை சால மீன் 300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.



