தமிழ்நாட்டில் முதல்முறையாக விஜய் மட்டுமே செய்துள்ள பெரிய சாதனை !
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1.jpg)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வசூலில் சொதப்பியது, இதனால் இப்படம் அங்கெல்லாம் படுதோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
விஜய் மட்டுமே செய்த சாதனை .
இந்நிலையில் தற்போது தளபதி தமிழ்நாட்டில் செய்துள்ள மிக பெரிய சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவே முதல்முறையாக ஒரு நடிகரின் திரைப்படம் ஐந்தாவது முறையாக 100 கோடி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1. மெர்சல்
2. சர்கார்
3. பிகில்
4. மாஸ்டர்
5. பீஸ்ட்



