ராஜபக்சர்களை பாதுகாக்கும் முயற்சியில் மகா சங்கத்தினர்! – பிரித்தானியா ஆய்வாளர் வெளியிட்ட தகவல்

Nila
3 years ago
ராஜபக்சர்களை பாதுகாக்கும் முயற்சியில் மகா சங்கத்தினர்! – பிரித்தானியா ஆய்வாளர் வெளியிட்ட தகவல்

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சியினரும், பொது மக்களும் இணைந்து போராடி வரும் நிலையில், ராஜபக்சர்களை மகா சங்கத்தினர் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என பிரித்தானியாவினை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மயூரன் M.A தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிராக இலங்கையில் தனது ஆதிக்கத்தினை நிலை நாட்ட அமெரிக்க முயற்சித்து வரும் நிலையில், இலங்கையில் இடம்பெறும் போராட்டங்களின் பின்னால் அமெரிக்கா செயற்படுகின்றது.

கடந்த ஆறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு இல்லாத ஒரு சிறப்பு அதிகாரம் கோட்டாபய ராஜபக்சவிற்கு காணப்பட்டுள்ளது. அதற்காகவே மகா சங்கத்தினர் பாதுகாத்து வருகின்றனர்.

அதாவது, கொழும்பிலும், ராஜபக்சர்களின் சொந்த ஊர்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ராஜபக்சர்களை காப்பாற்றும் முயற்சியில் பௌத்த மகா சங்கத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!