சுவிஸில் இருந்து திடீரென நாடுகடத்தப்படும் இலங்கையர்கள்.

Nila
4 years ago
சுவிஸில் இருந்து திடீரென நாடுகடத்தப்படும் இலங்கையர்கள்.

சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரிய நிலையில், விசா இல்லாமல் இருக்கும் மக்களுக்கோர் அதிமுக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு இலங்கை பொதுமக்களால் அரசுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியிலும் புலம்பெயர் நாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அவர்களின் வதிவிடவுரிமை வீசா கிடைக்காமல் இன்றுவரை நாட்களை நகர்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களை திடீர் திடீரென பிடித்து அடுத்த நாளே இலங்கைக்கு அனுப்பப்படுகிறார்கள். 

எனவே விசா இல்லாமல் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்கள், மற்றும் அகதி அந்தஸ்துக் கோரி விண்ணப்பித்துள்ளவர்கள்  உடன் உங்கள் சட்டத்தரணியின் ஆலோசனையைப் பெற்று அவதானமாக இருங்கள். 

இன்றும் லுசேர்ன் மாநிலத்தில் திருகோணமலையைச் சேர்ந்தவர் உட்பட 15 ற்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4