புத்தாண்டு கொண்டாட்ட சாலை விபத்துகளில் 35 பேர் உயிரிழப்பு

#Accident #Death
Prasu
4 years ago
புத்தாண்டு கொண்டாட்ட சாலை விபத்துகளில் 35 பேர் உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

புத்தாண்டையொட்டி அங்கு ஒரு வாரத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்தாக,

அந்த நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலான 7 நாட்களில் 312 விபத்துகள் ஏற்பட்டதாகவும், இதில் 35 பேர் பலியானதோடு, 552 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தலைநகர் வியன்டியேனில் 45 விபத்துகளில் 8 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்,

அதிவேகமாக ஓட்டுதல் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியாதது போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4