குறை பிரசவம் கருத்து - மன்னிப்பு கோரிய பாக்யராஜ்(வீடியோ)

சென்னையில் பாஜக அலுவலகத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் பாக்யராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சயில் பேசிய பாக்கியராஜ், ‘பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் 3 மாதத்தில் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள். ஏன் நான் இதை சொல்கிறேன் என்றால் 3 மாத குழந்தைக்குத்தான் வாய், காது இருக்காது’ என கூறினார்.
குறை பிரசவம் என பாக்கியராஜ் கூறிய கருத்து மாற்றுத்திறனாளிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்ற தனது கருத்துக்கு இயக்குநர் பாக்யராஜ் மன்னிப்பு கோரி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது கருத்து புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக கூறிய அவர், குறை பிரசவம் குறித்த தனது கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது என்றும், குறை பிரசவத்திற்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்தார்.
இன்றைய புத்தக வெளியிட்டு விழாவில் நான் பேசிய கருத்துக்களுக்கு என் தன்நிலை விளக்கம். pic.twitter.com/nMlf70kptl
— K Bhagyaraj (@ungalKBhagyaraj) April 20, 2022



