இலங்கையில் சடுதியாக குறைவடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!
Nila
3 years ago

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை 4,000 முதல் 5,000 வரை இருந்ததாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக நாளாந்தம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1000 முதல் 2000 வரை குறைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மார்ச் 18 வரை 329,095 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.



