கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டம்
#SriLanka
#Covid Vaccine
Prasu
3 years ago

இலங்கை மக்களுக்கு எதிர்வரும் காலத்தில் கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்.
இதேவேளை, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல் என்பன கட்டாயம் இல்லை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



