இன்னும் 10 நாட்களில் மரணம்! தன் மரணத்தை தானே தெரிவு செய்யும் மனிதர்

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த கைதி ஒருவர் தம்மீதான மரண தண்டனையை மின்சார நாற்காலியில் அல்லது துப்பாக்கிச் சூடு மூலம் பெறுவதை தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
1999 ஆம் ஆண்டு கொள்ளை ஒன்றின்போது எழுதுனர் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்கு 57 வயதான ரிச்சர்டட் மூர் மீது வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
அமெரிக்காவில் அண்மைக் காலத்தில் விஷ ஊசி செலுத்தியே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோதும் அதற்கு அத்தியாவசியமான மூலப்பொருட்களை வழங்க மருந்து உற்பத்தியாளர்கள் மறுத்து வருகின்றனர்.
இதனால் மின்சாரக் கதிரை அல்லது துப்பாக்கிச் சூடு குழுவால் சூடு நடத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது பற்றி கைதி தீர்மானிக்கவிருப்பதாக சீர்திருத்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த இரு மரண தண்டனை முறைகளும் அரசியலமைப்பை மீறுவதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். இதனை விசாரிக்க நீதிபதி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும் ரிச்சர்டட் மூர் துப்பாக்கிச் சூடு மூலம் மரணத்தைத் ஒப்புக் கொண்டதாகக் கூறினார். ஏனெனில் அவர் மின்சாரம் தாக்குதலால் ஏற்படும் மரணத்தை மிகவும் கடுமையாக எதிர்த்தார்.
1976 இல் அமெரிக்காவில் மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்ட பின் இதுவரை மூன்று முறையே துப்பாக்கிச்சூடு மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



