இலங்கையின் கடன் மதிப்பீட்டை குறைத்தது மூடிஸ் நிறுவனம்
Mayoorikka
3 years ago

இலங்கையின் கடன் மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம், “Caa2” இலிருந்து “Ca” ஆகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து மூடிஸ் நிறுவனம் இலங்கையின் இறையாண்மை மதிப்பீட்டை குறைத்துள்ளது.



