உடல் வெப்பநிலை பரிசோதிப்பது அவசியமில்லை
Mayoorikka
3 years ago

கட்டங்களுக்குள் நுழையும்போது உடல் வெப்பநிலையை அளவிடுவது இன்று (18) முதல் கட்டாயம் இல்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
அத்துடன் அவ்வாறு வருகை தருபவர்களின் தகவல்களை பதிய வேண்டிய அவசியமும் இல்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகளின் போது தவிர பொது இடங்களில் முகக்கவசங்கள் அணியவண்டியது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிததுள்ளார்.



