இலங்கையை வந்தடையவுள்ள 1400 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல்!
Mayoorikka
3 years ago

1400 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (18) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை (19) காலை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.
அத்துடன், எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் 7000 மெற்றிக் தொன் எடையுள்ள இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



